EThanthi - ஆளே மாறிய வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரி !

Flash News

ஆளே மாறிய வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரி !

1990ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் காவேரி. அதன் பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், 
ஆளே மாறிய வைகாசி பொறந்தாச்சு காவேரி
போக்கிரி தம்பி, நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் உள்பட சில படங்களில் நடித்தார்.

அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சூர்யா, காவேரி, தங்கம், மீரா, கொடி முல்லை, வம்சம் உள்பட பல தொடர்களில் நடித்தார்.

மெட்டி ஒலி தொடரில் அவர் நடித்த தனம் கேரக்டர் அவருக்கு பெரிய புகழை கொடுத்தது.

கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன்பிறகு சீரியலிலும் நடிக்க வில்லை.
மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்களின் ரீ-யூனியனுக்கு வந்த காவேரியை பார்த்து அதிர்ச்சி அடையாத வர்களே இல்லை.

காவேரி என்றாலே அந்த மொழுமொழு தோற்றம் தான் நினைவுக்கு வரும்.

ஆனால் தற்போது உடல் எடை கணிசமாக குறைந்து முகத்தோற்றம் மாறி இருக்கிறார்.

பலர் அவரை காவேரி என்றே நம்பவில்லை. திருமணத்திற்கு பிறகு காவேரிக்கு உடல் எடை தானாகவே குறைய ஆரம்பித்திருக் கிறது.

மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்களும் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறி யிருக்கிறார்கள்.

“மீண்டும் சின்னத் திரையில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் காவேரி.
ஆளே மாறிய வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரி ! ஆளே மாறிய வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரி ! Reviewed by EThanthi.in on December 19, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close