EThanthi - தர்பார்க்குப் பின் தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Flash News

தர்பார்க்குப் பின் தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி யுள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பட்டாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ்.

புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். 

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளி யிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. 

அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி யுள்ளது. அதில் படம் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிப்பும் வெளியாகி யுள்ளது.
தர்பார்க்குப் பின் தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! தர்பார்க்குப் பின் தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! Reviewed by EThanthi.in on December 15, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close