EThanthi - தோழிகளுடன் அசைவ உணவு சாப்பிட்ட நயன்தாரா - ரசிகர்கள் எரிச்சலில் !

Flash News

தோழிகளுடன் அசைவ உணவு சாப்பிட்ட நயன்தாரா - ரசிகர்கள் எரிச்சலில் !

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செல்வதையும் அந்த புகைப்படங் களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுதையும் வழக்கமாக வைத்துள்ளார். 
தோழிகளுடன் அசைவ உணவு சாப்பிட்ட நயன்தாரா

விக்னேஷ் சிவனும் டுவிட்டரில் ஜோடியாக இருக்கும் புகைப்படங் களை பகிர்ந்து காதல் மொழிகளை பதிவிட்டு வருகிறார். 4 வருடங்களாக இந்த காதல் நீடித்து வருகிறது. 

இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் வலைத் தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

எதையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நயன்தாரா அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா அங்கு பெரிய மேசையில் கோழி கறி, மீன் வகைகளை பரப்பி வைத்து தோழிகளுடன் விருந்து சாப்பிடும் புகைப்படமும் 

சிக்கனை கையில் வைத்துக் கொண்டு குறும்புத்தனம் செய்யும் வீடியோவும் சமூக வலைத் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்காவை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா? அம்மன் வேடத்தில் நடிக்க நீங்கள் விரதம் இருப்பதாக சொன்னார்களே?

என்றெல்லாம் சமூக வலைத் தளத்தில் கேள்வி எழுப்பி அவரை சாடி வருகிறார்கள்.

தோழிகளுடன் அசைவ உணவு சாப்பிட்ட நயன்தாரா - ரசிகர்கள் எரிச்சலில் ! தோழிகளுடன் அசைவ உணவு சாப்பிட்ட நயன்தாரா - ரசிகர்கள் எரிச்சலில் ! Reviewed by EThanthi.in on December 09, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close