ஹ்ரித்திக் ரோஷனின் ரசிகைக்கு நேர்ந்த சோகம் !
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் அதீத ரசிகையான மனைவியை, பொறாமை யால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அமெரிக்கா வில் தினேஷ்வர் புத்திதட் என்பவருக்கும், டோன்னி டோஜோய் என்ற பெண்ணுக்கும், கடந்த ஜூலை மாதம் தான் திருமணம் நடந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையான டோன்னி, அவர் மீது அதீத பிரியம் கொண்டிருந்தது அவரது கணவருக்கு பிடிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மனைவி டோன்னியை கத்தியால் குத்தி கொலை செய்த தினேஷ்வர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷனின் பாடல் ஓடினால் கூட தொலைக் காட்சியை அனைத்து விடும் அளவுக்கு தினேஷ்வர் பொறாமை கொண்டிருந்த தாக அவர்களது நண்பர்கள் தெரிவித் துள்ளனர்.



No comments