EThanthi - நடிகர் விஜயின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டார் என்று மணிமாறன் புகார் !

Flash News

நடிகர் விஜயின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டார் என்று மணிமாறன் புகார் !

பணமோசடி புகார் தொடர்பாக மணிமாறன் அளித்த புகாருக்கு, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் தயாரிப்பு நிறுவனமான க்ரீன் சிக்னல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜயின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டார்

வடபழனி ஆற்காடு சாலையில் வசிக்கும் மணிமாறன், அக்டோபர் 1-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதில் "’டிராஃபிக் ராமசாமி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரமானந்த் சுப்ரமணியம் என்பவருக்குக் கொடுப்பதாகக் கூறி ரூ.21 லட்சம் பணத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெற்றதாகவும், ஆனால் உரிமையைக் கொடுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பன்றி கொழுப்பு அனைத்து உணவுகளிளும் சேர்க்கப் பட்டுள்ளது எச்சரிக்கை !
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னை மிரட்டியதாகவும், இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் மணிமாறன் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரைப் பெற்ற காவல் ஆணையரக அலுவலக அதிகாரிகள் புகாரை சம்பந்தப்பட்ட காவல் எல்லை உயர் அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி யுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகரனின் க்ரீன் சிக்னல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், "2018-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிப்பில் 'டிராஃபிக் ராமசாமி' என்ற படம் தயாரிக்கப் பட்டது.

இந்தப் படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார். இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார்.

ஆனால், ஒப்பந்தப்படி அடுத்தகட்டப் பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியனால் தர முடிய வில்லை. பட வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார்.
தும்மலை அடக்க கூடாது ஏன் தெரியுமா?
அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்வதால் பட வெளியீட்டைத் தள்ளி வைக்கவும் முடியாத நிலை.

இந்நிலையில் படம் வேறு விநியோகஸ் தர்களுக்கு விற்கப்பட்டால் பணத்தைத் தந்து விடுவதாகத் தெரிவிக்கப் பட்டது. ஆனால், கடைசி நேரமாக இருந்தமையால் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதனால் எஸ்.ஏ. சந்திரசேகரே தமிழகமெங்கும் 'டிராஃபிக் ராமசாமி’ படத்தை வெளியிடும் நிலைக்குத் தள்ளப் பட்டார். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார்.
பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
ஆனால், இந்தப் படத்தை வாங்குவதற்கோ, வெளி யிடுவதற்கோ எந்தத் தொடர்புமே இல்லாத மணிமாறன் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜயின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டார் என்று மணிமாறன் புகார் ! நடிகர் விஜயின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டார் என்று மணிமாறன் புகார் ! Reviewed by EThanthi.in on October 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close