EThanthi - புரூஸ் லீக்காக நடித்தேன் - மனம் திறந்த ஜாக்கி சான் !

Flash News

புரூஸ் லீக்காக நடித்தேன் - மனம் திறந்த ஜாக்கி சான் !

‘என்டர் தி ட்ராகன்’ படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் புரூஸ் லீக்காக வலிப்பது போல நடித்தேன் என்று நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.
புரூஸ் லீக்காக நடித்தேன்

புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’. உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றி யிருப்பார்.

படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார்.
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அந்தக் காட்சியில் நடித்த அனுபவத்தைப் பற்றி ஜாக்கி சான் மனம் திறக்கும் வீடியோ ஒன்றை புரூஸ் லீயின் மகள் ஷனோன் லீ தனது தந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி யுள்ளார்.

அதில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது:

'என்டர் த ட்ராகன்' படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார்.

நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டி விட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்து விட்டது.
குடிகார அப்பாவுக்கு இப்படி ஒரு பெண் - திகைத்த ஆம்பூர் மக்கள் !
நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும் வரை நடித்துக் கொண்டே இருந்தார். பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார்.

எனக்கு வலி போய் விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமை யாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்''.
புரூஸ் லீக்காக நடித்தேன் - மனம் திறந்த ஜாக்கி சான் ! புரூஸ் லீக்காக நடித்தேன் - மனம் திறந்த ஜாக்கி சான் ! Reviewed by EThanthi.in on October 04, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close