EThanthi - 24 மணி நேர உண்மை சம்பவம் படமான கதை !

Flash News

24 மணி நேர உண்மை சம்பவம் படமான கதை !

அவசர சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், எதிர்வினை யாற்று. கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ், இளமைதாஸ் இயக்கி யுள்ளனர். 
ண்மை சம்பவம் படமான கதை
சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். படம் குறித்து அலெக்ஸ் கூறியதாவது: 

எந்த வம்புக்கும் செல்லாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் போட்டோ கிராபர், ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராவிதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். 

பிறகு அந்த பெண்ணுடன் சேர்ந்து, அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன என்பது கதை. இன்று இரவு தொடங்கி, நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் கதை கொண்ட படம் இது. 

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியுடன் இப்படத்தை உருவாக்கி யுள்ளோம்.
24 மணி நேர உண்மை சம்பவம் படமான கதை ! 24 மணி நேர உண்மை சம்பவம் படமான கதை ! Reviewed by EThanthi.in on October 27, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close