யோகி பாபு நடிக்கும் “பன்னி குட்டி” எப்படி இருக்க போகிறது?
அணுசரன் முருகையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் “பன்னி குட்டி” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி. கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கே இசையமை க்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்க நகைச்சுவை அசுரர்கள் உருவாகி கொண்டே தான் இருக்கிறார்கள்.
நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தனர். அவ்வரிசையில் தற்போது யோகிபாபு இறங்கி யிருக்கிறார்.
யோகி பாபுவிற்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக் கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் கருணாகரன், சிங்கம் புலி, யோகி பாபு கூட்டணி ரகளையாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.



No comments