EThanthi - நீயா-2 பாம்பு படத்தின் Trailer வெளியானது !

Flash News

நீயா-2 பாம்பு படத்தின் Trailer வெளியானது !

நீயா-2 திரைப்படத்தின் மிரட்டலான Trailer-னை படக்குழுவினர் வெளி யிட்டுள்ளனர். கடந்த 1979-ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் நீயா. இத்திரைப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியா பாம்பாக வாழ்ந்திருந்தார். 
நீயா-2 படம்

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் பாம்பு மையப் படுத்திய திரைப் படங்களுக்கு மவுசு கூடியது. தற்போது தொலைக் காட்சிகளில் வரும் தொடர்களிலும் பாம்புகளை மையப் படுத்திய கதைகளும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்நிலையில் தற்போது பாம்பை மையப்படுத்தி நீயா-2 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படமானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நீயா திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது என படக்குழுவினர் முன்னதாக தெரிவித்து இருந்தனர். 

தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், காத்ரீன் தெரெஸா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். 
மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி யுள்ள இத்திரைப் படத்தின் ப்ரோமஷன் வேலையின் ஒரு பகுதியாக படத்தின் Trailer-னை படக்குழுவினர் வெளி யிட்டுள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரையை எட்டும் என எதிர் பார்க்கப் படுகிறது.
நீயா-2 பாம்பு படத்தின் Trailer வெளியானது ! நீயா-2 பாம்பு படத்தின் Trailer வெளியானது ! Reviewed by EThanthi.in on March 26, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close