சமந்தாவின் நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு !
ஏராளமான திரை நட்சத்திரங் களின் நடிப்பில் உருவாகியுள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் சமந்தாவின் நடிப்பை குறித்து சர்வதேச ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தேசிய விருது பெற்ற “ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா 8 ஆண்டுகளு க்கு பின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை இயக்கி இன்று வெளி வந்துள்ளது.
இதில் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படம் முன்கூட்டியே பத்திரிக்கை யாளர்களுக் கான ப்ரீவியூ காட்சி வெளியிடப் பட்டதால் பெரும்பாலான இணைய தளங்களில் இந்த படத்தின் விமர்சனம் நேற்றே வந்து விட்டது.
படத்தை பார்த்தவர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை தெரிவித்து வரும் வேளையில் தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பிரபல பத்திரிக்கை நிறுவனமான "நியூ யார்க் டைம்ஸ்" வெளியிட் டுள்ளது.
அதில், படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டியதோடு , சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் வெகுவாக பாராட்டி யுள்ளது நியூ யார்க் டைம்ஸ்.
விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் அற்புதமாக நடித்திருந்த போதிலும் சமந்தாவின் கேரக்டரையும் அவரது துணிச்சலான நடிப்பையும் புகழ்ந்து தள்ளி யுள்ளனர்.



No comments