EThanthi - சந்தியாவை நான் கொலை செய்யவில்லை இயக்குநரின் புலம்பல் !

Flash News

சந்தியாவை நான் கொலை செய்யவில்லை இயக்குநரின் புலம்பல் !

சந்தியாவை நான் கொலை செய்ய வில்லை என்றும் `மீடியாக்களிடம் என்னைப் பேச அனுமதியுங்கள்' என்றும் போலீஸாரிடம் சினிமா இயக்குநர் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில், கடந்த 21-ம் தேதி கண்டெடுக் கப்பட்ட கை, கால்கள் யாருடையது என்பதை பள்ளிக்கரணை போலீஸார் கண்டறிந்தனர். 
சந்தியா கொலை
நாகர் கோவிலைச் சேர்ந்த சந்தியாவை, அவரின் கணவரான சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் கொடூரமாகக் கொலை செய்து, உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி, குப்பைத் தொட்டிகளிலும் அடையாற்றிலும் வீசியதாக போலீஸிடம் தெரிவித்தார். இதையடுத்து, பால கிருஷ்ணனைக் கைதுசெய்த போலீஸார், சந்தியாவின் உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர். 

கை, கால்களைத் தொடர்ந்து, ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் உள்ள அடையாற்றின் கரையோரத்தில், துண்டிக்கப்பட்ட இடுப்புப் பகுதியை போலீஸார் மீட்டனர். சந்தியாவைக் கொலை செய்த பாலகிருஷ்ணன், அவரின் உடலை நிர்வாணப் படுத்தியதாக போலீஸாரிடம் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள இடுப்புப் பகுதியில் உள்ளாடை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். பால கிருஷ்ணனிடம் உங்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் என்ன வென்று தெரியுமா என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, `தெரியாது' என்று அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து, பிப்ரவரி 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை அடைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.

நீதிமன்றத்தி லிருந்து வெளியில் வந்த பாலகிருஷ்ணன், செய்தியாளர் களைப் பார்த்து சிரித்த முகத்துடன், `நான் சந்தியாவைக் கொலை செய்ய வில்லை' என்று கூறியபடிச் சென்றார். அதோடு, `என்னை மீடியாவில் பேச அனுமதியுங்கள்' என்று போலீஸாரிடம் கேட்டுள்ளார். 

ஆனால், போலீஸார் அனுமதிக்காமல் அவரை வாகனத்தில் ஏற்றி புழல் சிறைக்குக் கொண்டு சென்றனர். சந்தியாவை கொலை செய்ய வில்லை என பாலகிருஷ்ணன் திடீரெனக் கூறியிருப்பது, இந்த வழக்கில் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஆலந்தூர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வில்லை. 

பால கிருஷ்ணனின் அம்மாவும் தன்னுடைய மகன் கொலை செய்ய வில்லை என்று நேற்று தெரிவித்துள்ளார். இதனால், சந்தியாவைக் கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், பாலகிருஷ்ணன் தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பள்ளிக்கரணை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``எந்தக் குற்றவாளியும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். அது போல தான் பாலகிருஷ்ணனும், தான் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். பாலகிருஷ்ணன் கூறிய இடத்தில் தான் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. 
இயக்குநர் புலம்பல்
சம்பவத்தன்று சந்தியாவுக்கும் பால கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த தகராறை வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார். அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து சந்தியாவின் உடல் பாகங்களை வெளியில் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும் எங்களுக்கு சிக்கியுள்ளது. 

அதோடு, மகளிர் விடுதியில் தங்கியிருந்த சந்தியாவை போனில் அழைத்துப் பேசியிருக்கிறார் பாலகிருஷ்ணன். எனவே, எங்களின் விசாரணை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் பால கிருஷ்ணணைக் கைது செய்துள்ளோம். 

இந்த வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம்" என்றனர். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் விசாரணை முடிந்து, நீதிமன்றத்து க்கு பால கிருஷ்ணனை அழைத்துச் சென்ற போது, 'சிறைக்குப் போய் விட்டு வருகிறேன்' எனக் கூறியுள்ளார். 

அதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சி யடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் நான் கொலை செய்யவில்லை என்று கூறிய பால கிருஷ்ணனின் நடவடிக்கை களைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. நடிகர் வடிவேல், 'தலைநகரம்' படத்தில் 'நான் ஜெயிலுக்குப் போறேன்' என்று சொல்வார். அது போல சினிமா இயக்குநர் பால கிருஷ்ணனும் கூறி யிருக்கிறார்.
சந்தியாவை நான் கொலை செய்யவில்லை இயக்குநரின் புலம்பல் ! சந்தியாவை நான் கொலை செய்யவில்லை இயக்குநரின் புலம்பல் ! Reviewed by EThanthi.in on February 08, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close