EThanthi - தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப் பட்டது - பரபரப்பு ஓயுமா?

Flash News

தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப் பட்டது - பரபரப்பு ஓயுமா?

தயாரிப்பாளர் சங்கத்தில் போடப்பட்ட பூட்டு திறக்கப் பட்டது. அடுத்து என்ன நடக்கும் என பரபரப்புடன் இருக்கிறது திரையுலகம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது.

சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு குழுவினர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று புதன் கிழமை 19ம் தேதி அன்று அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா,
ஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து எவ்வளவு தெரியுமா?
சுரேஷ் காமாட்சி முதலான தயாரிப்பா ளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில்

உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத் துக்குப் பூட்டுப் போட்டனர்.

மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்து விட்டார் என்பது உள்ளிட்ட குற்றச் சாட்டு களையும் அடுக்கினர்.

இது குறித்து விஷால், பொதுக் குழுவில் கணக்குக் காட்டப் படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அலுவலக த்துக்கு போடப்பட்ட பூட்டை உடைப்ப தற்காக விஷால் மற்றும் அவரின் ஆதரவா ளர்கள் வந்திருந்தனர்.

ஆனால் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், போலீசார் விஷால் உள்ளிட்ட வர்களை கைது செய்தார்கள்.

அப்போது, நடிகர் விஷால் தெரிவித்த தாவது:

யாரோ ஒருத்தங்க பூட்டுப் போட்டிருக் காங்க. அதை உடைச்சிட்டு, எங்க ஆபீசுக்குப் போறதுக்கு போலீசார் எங்களை அனும திக்கலை.

தடுத்துக் கிட்டே இருந்தாங்க. திருட்டுப் பூட்டுக்கு போலீஸ் காவல் காக்கிறாங்க.

ஏன் இப்படி பண்றீங்கன்னு கேள்விகள் கேட்டதுக்கு, எங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இப்படிலாம் நடக்குமா, இப்படிலாம் கூட செய் வாங்களா? நம்பவே முடியல. ஆச்சரி யமாவும் அதிர்ச்சி யாவும் இருக்கு.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை க்கும் அரசுக்கும் எந்தத்

தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித் துள்ளார்.
இந்தியாவில் மருத்துவர்களின் கொடூர குணம் !
சங்கத்தின் பிரச்சினை களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தயாரிப் பாளர் சங்கத்தில் ஒரு தரப்பினர் அதாவது விஷால் தரப்பினர் பூட்டுப் போட்டி ருந்தனர்.

இப்போது அந்தப் பூட்டு தற்போது திறக்கப் பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப் பட்டது - பரபரப்பு ஓயுமா? தயாரிப்பாளர் சங்க பூட்டு திறக்கப் பட்டது - பரபரப்பு ஓயுமா? Reviewed by EThanthi.in on December 21, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close