'பேட்ட' படத்தின் கதை - ஆணவக் கொலைகளை மையப்படுத்தி?
ஆணவக் கொலைகளை மையப் படுத்தியே 'பேட்ட' படத்தின் கதை அமைக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, ஆணவக் கொலைகளை மையப்படுத்தி அமைக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
படத்தின் கதைக்களம் எதுவுமே வெளியே தெரியாத வகையில், டீஸர் தயார் செய்து வெளியிட்டது படக்குழு.
இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிவுற்று, தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கி யுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தணிக்கைப் பணிகள் முடிவடைந் துள்ளதால், முழுமையாக விளம்பரப் படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
படத்தின் ட்ரெய்லரை புத்தாண்டுக்கு வெளியிடலாமா என்ற ஆலோசனை யில் இறங்கி யுள்ளது படக்குழு.
'பேட்ட' படத்தில் ரஜினி காந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக் கிறார்கள்.
அனிருத் இசையமைத் துள்ள இப்படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் முக்கியமான தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.



No comments