ஜெயாவா, நித்யாவா, யோசிக்க வைத்த போஸ்டர் !
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது.
இயக்குநர்கள் பிரியதர்ஷினி, பாரதிராஜா, விஜய் மற்றும் லிங்குசாமி ஆகியோர் இவரின் வாழ்கையை படமாக்க போட்டி போட்டு வருகின்றனர்.
இவர்களில் பிரியதர்ஷினி இயக்கும் பட வேலைகள் துவங்கி விட்டன.
தி அயர்ன் லேடி என பெயரிடப் பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதா வாக நித்யா மேனன் நடிக்கிறார்.
ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்தும், அவரைப் பற்றிய செய்திகளை கேட்டும், தன்னை தயார்படுத்தி வருகிறார் நித்யா.
தமிழ், தெலுங்கு, கன்னடன் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இப்படத்தை இயக்குகிறார் பிரியதர்ஷினி.
இந்நிலையில், ஜெயலலிதா வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று(டிச., 5) இப்படத்தின் போஸ்டரை வெளி யிட்டுள்ளனர்.
போஸ்டரில் இருப்பது ஜெயலலிதாவா அல்லது நித்யா மேனனா என தெரியாத அளவிற்கு
அப்படியே ஜெயலலிதா போன்று பிரதிபலிக் கிறார் நித்யா மேனன். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது.



No comments