தயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா? - நடிகை !
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனார் என்று வெளியான தகவலை நடிகை ஜெனிபர் லாரன்ஸ் மறுத்துள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ் தன்னுடன் உறவு கொண்டதால் தான் நடிகையாகி ஆஸ்கர் விருது எல்லாம் வாங்கினார் என ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பெருமை பேசியதாக நடிகை ஜேன் டோ தெரிவித்துள்ளார்.
வெயின்ஸ்டீன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த மனுவில் ஜேன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதை ஜெனிபர் லாரன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பெண்கள்
ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை நினைத்து என் இதயமே நொறுங்கிவிட்டது. அவருடன் நான் உறவு கொண்டது இல்லை.
வேலை நிமித்தமாக பேசியதை தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் கிடையாது. பெண்களை தன் வலையில் விழ வைக்க ஹார்வி வெயின்ஸ்டீன் இப்படி எதையாவது கூறுகிறார் என்று ஜெனிபர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ்
என்னுடன் படுக்கைக்கு வந்ததால் தான் அந்த பெண் பெரிய நடிகை ஆனார் என்று கூறி பெண்களை தன் வழிக்கு வரவழைத் துள்ளார் ஹார்வி வெயின்ஸ்டீன் என்பதற்கு ஜேன் டோ கூறியது ஒரு எடுத்துக் காட்டு என்கிறார் ஜெனிபர் லாரன்ஸ்.
பட வாய்ப்பு தேடி வந்த பல நடிகைகளிடம் பலவந்தமாக ஓரல் செக்ஸ் வைத்துள்ளார் ஹார்வி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நடிகைகளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார் அவர்.
விளக்கம்
ஹார்வி வெயின்ஸ்டீன் ஜெனிபர் லாரன்ஸுடன் உறவு கொண்டது இல்லை. அப்படி இருக்கும் போது நடிகை ஜேன் டோ தவறுதலாக கூறியுள்ளதை அறிந்து வெயின்ஸ்டீன் வெட்கப் பட்டுள்ளார்.
இது அவரின் பெயரை கெடுக்கும் முயற்சி என்று ஹார்வி வெயின்ஸ்டீனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது
வெயின்ஸ்டீன் தயாரித்த சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜெனிபர் லாரன்ஸுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
வெயின்ஸ்டீன் தன்னிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்று ஜெனிபர் லாரன்ஸ் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.





No comments