EThanthi - வைரலாகும் பேட்ட படத்தின் 'மரணமாஸ்' பாடல் !

Flash News

வைரலாகும் பேட்ட படத்தின் 'மரணமாஸ்' பாடல் !

'பேட்ட' படத்தின் 'மரணமாஸ்' பாடல் ஒரு மணி நேரத்துக்குள் ஒரு மில்லியன் பார்வை களைக் கடந்து வைரலாகி வருகிறது

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திரு க்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாக வுள்ளது. 

இதற்கு முன்பாக இன்று (டிசம்பர் 3) ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

'மரணமாஸ்' என்ற தலைப்பில் உருவாகி யுள்ள பாடல் இன்று ( டிசம்பர் 3) மாலை 6 மணியள வில் வெளியிட்டது படக்குழு. 

அனிருத் மற்றும் எஸ்.பி. பால சுப்பிரமணியம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

’தட்லாட்டம் நாங்க தர்லாங்க ஸாங்க, உள்ளார வந்தான்னா பொல்லாதவன் தாங்க…’ 

என்று ஆரம்பிக்கும் பாடல், முழுக்க நாட்டுபுறக் கலைஞர்கள் வாசிக்க அமைத் திருக்கிறது.

நீண்ட நாட்கள் கழித்து ரஜினி படத்தில் ஒரு முழுமை யான குத்துப்பாடலாக அமைந்தி ருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இப்பாடல் வெளியான ஒரு மணி நேரத்துக்குள் ஒரு மில்லியன் பார்வை களை கடந்து விட்டதாக 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மேலும், வைரலாக அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது 'மரணமாஸ்' பாடல்

'பேட்ட' படத்தில் ரஜினி காந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், 

சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக் கிறார்கள். 
பேட்ட’ ரஜினியின் ‘மரண மாஸ்’ பாடலின் வீடியோ !
அனிருத் இசையமைத் துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'பேட்ட' 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித் துள்ளது.
வைரலாகும் பேட்ட படத்தின் 'மரணமாஸ்' பாடல் ! வைரலாகும் பேட்ட படத்தின் 'மரணமாஸ்' பாடல் ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close