என்னுடைய வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை - காயத்ரி ரகுராம் !
மதுபோதையில் தாம் வாகனம் ஓட்ட வில்லை என மறுத்துள்ள நடிகையும், நடன இயக்குநரு மான
காயத்திரி ரகுராம், தனது வளர்ச்சி சிலருக்குப் பிடிக்க வில்லை எனக் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு திருவிக மேம்பாலம் அருகில் வாகனச் சோதனை நடைபெற்ற தாகவும்,
அப்போது அவ்வழியாக வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது.
அப்போது காரில் இருந்து கீழே இறங்காமல் தன்னை அங்கிருந்து போக விடும்படி போலீசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தாகவும்,
அவர் மதுபோதை யில் இருந்ததால் அவரிடம் போலீசார் ரூ. 3,500 அபராதம் வசூலித்த தாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் காயத்ரி ரகுராம் உச்சகட்ட போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்ட போலீசார் அனுமதி மறுத்து
போலீசாரே அவரது காரை ஓட்டிச் சென்று நுங்கம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்
அவரை கொண்டு போய் பத்திரமாக விட்டு விட்டு வந்ததாக வும் கூறப்பட்டது.
இந்த செய்திகள் வெளியானதை அடுத்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகள் மூலம் விளக்கம் கொடுத்தார்.
தான் குடிபோதையில் இல்லை என்றும், வழக்கமான சோதனை களையே போக்குவரத்து காவலர்கள் அதில் கூறியிருந்தார்.
மேலும், காரை நான் தான் ஓட்டிச் சென்றேன். நான் குடிபோதை யில் இருந்திருந் தால்
காரை ஓட்ட போலீசார் எப்படி என்னை அனுமதித் திருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இது போன்ற கட்டுக் கதைகளை நிறுத்துங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனை யடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை,
“நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை; வேண்டு மென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம்.
பிக்பாஸில் பங்கேற்பதற் காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்தார்; அன்றே விலகி விட்டார்” என்று கூறினார்.
பாஜகவில் இல்லை என தமிழிசை கூறியதை அடுத்து, அவருக்கு பதில் அளிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் தமது ட்விட்டரில்,
“டியர் தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டது ஒரு கணினி மூலமாக.
Dear @DrTamilisaiBJP madam I’m member of Bjp through computeriesed machine. You cannot include and exclude as u wish. It’s not local party. It’s a national party. Second of all ur TNbjym work and leader against women blackmail and threaten them. Can’t question them?— Gayathri Raguramm (@gayathriraguram) November 27, 2018
உங்கள் விருப்பப்படி யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ முடியாது. இது ஒரு பிராந்திய கட்சி அல்ல.
தமிழக பாஜகவின் யுவ மோர்சா செயல் வீரர்களும் தலைவர் களும் பெண்களுக்கு எதிரானவர்கள்.
அவர்கள் பெண்களை மிரட்டு கின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா?” என்றார்.
மேலும், “நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக் காக அல்ல.
உங்கள் கட்சியி லிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டு விட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள்.
உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும் தான்.
நீங்களே எல்லா எதிர் காலத்தையும் நிர்ணயித்து விட முடியாது” என்பது உள்ளிட்ட
பல்வேறு கருத்துக் களை தமது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து புதிய தலைமுறை நடத்திய சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் விரிவான பதில் அளித்தார்.
நீங்கள் பாஜகவில் இல்லையென தமிழிசை கூறியுள்ளது குறித்து:-
தமிழ் நாட்டு பாஜகவில் நான் இல்லை. தேசிய அளவிலான பாஜகவில் இளைஞர் பிரிவில் உறுப்பினராக உள்ளேன்.
தமிழ்நாட்டு பாஜகவில் நான் இல்லை என்பதை அவர்கள் (தமிழிசை) எப்படி முடிவு செய்தார்கள் என்பது தெரிய வில்லை.
ஏனெனில் இது பிராந்திய கட்சி அல்ல. என்ன நடந்தது என்று தெரியாமல் என் மேல் பழி போட்டது எனக்கு தப்பா படுகிறது.
ஒரு பெண் தலைவராக உள்ள பாஜகவில் பெண்ணுக்கு எதிராக நடைபெறும் விஷயங் களை கேட்பதில்லை என்ற உங்களது ட்விட்டிற்கு பதில் அளித்தார்களா?
நிறைய சம்பவங்களில் பெண்களுக் காக நான் குரல் கொடுத்துள்ளேன்.
விமானத்தில் சோபியா என்ற பெண் சத்தம் போட்டதற்கு எதிராக நான் குரல் கொடுத்துள்ளேன்.
தேவையென்ற போது நம்மை பயன்படுத்திக் கொண்டு, தேவை யில்லை எனும் போது தூக்கி எறியக் கூடாது.
என்ன நடந்தது என்று நம்மிடம் விசாரிப்பது தான் ஒரு தலைவருக் கான அழகு.
அவர்கள் அப்படி கேட்க வில்லை. இதுவரை அவர்கள் தவிர்த்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.
அதற்கு காரணம், அவர்கள் கூட உள்ள சில பேர் என்பது நன்றாகவே தெரியுது.
மேலும், வாகன சோதனை நடந்த நேரத்தில் நடந்த விஷயம் குறித்தும் விரிவாக பதில் அளித்தார்.
போலீசார் பயன்படுத்தும் பிரெத் அனலைசர் கருவி எவ்வளவு சதவீதம் ஆல்கஹால் உள்ள
என்பதை தான் காட்டும் என்றும் ரத்த பரிசோதனை செய்தால் தான் மது அருந்தியதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறினார்.
ரத்த பரிசோதனை க்கும் தயார் என்றும் தெரிவித்தார்.




No comments