EThanthi - அஜித்தைப் பார்க்க நள்ளிரவில் விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !

Flash News

அஜித்தைப் பார்க்க நள்ளிரவில் விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் முட்டித் தள்ளியதால் போலீசார் லேசாக தடியடி நடத்தி,
அஜித்தை காருக்கு அருகில் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

'விஸ்வாசம்' படத்தின் பணிகளை முடித்து விட்டு, அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாக வுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

இதனிடையே, ஆளில்லா விமானங் களை இயக்குவது தொடர்பான ஆலோசனைகள், அது தொடர்பான பயணத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சென்னை குரோம் பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. கல்லூரியில்,

ஆளில்லா விமானங் களை இயக்குவதற் கான பயிற்சி ஆலோகராக அஜித் இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஹெலிகாப்டரை இயக்குவது எப்படி என்பதை யெல்லாம் அறிந்து கொள்வதற் காக, அஜித் ஜெர்மன் நாட்டுக்குச் சென்றிருந்தார்.
பயணத்தை முடித்து விட்டு, நேற்று (நவம்பர் 30) நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் இறங்கினார்.

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் பெருமளவில் அங்கே கூடி விட்டனர்.

மேலும் மற்ற விமானங் களில் ஏறுவதற்குக் காத்திருந்த வர்கள், பயணிகளை வழியனுப்பு வதற்காக வந்தவர்கள்,

விமான நிலைய ஊழியர்கள் என ஏராளமானோர் அஜித்தைப் பார்த்ததும் உற்சாகத் துடன் அவரை நெருங்கி, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள சூழ்ந்தார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைக் கண்ட விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, கூட்டத்தை விலக்கப் போராடி னார்கள்.

ஒரு கட்டத்தில் அஜித்தை மீண்டும் விமான நிலையத்திற் குள்ளேயே அழைத்துச் செல்லும் படியான நிலை ஏற்பட்டது.

ஆனாலும் ரசிகர்கள் விமான நிலையத்துக் குள்ளேயே நுழைந்தனர்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து, வேறொரு பாதை வழியாக அஜித்தை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தார்கள்.

அங்கேயும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ‘தல தல’ என்று உற்சாகக் குரல் எழுப்பி னார்கள்.

பெருங்கூட்டத் துக்கு மத்தியில் அவரை காருக்கு அழைத்து வருவதற்கு போலீசார் சிரமப் பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல், லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
ஒரு வழியாக அஜித்தையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.

நள்ளிரவில் அஜித் வருவதை அவருடைய ரசிகர்கள் எப்படி அறிந்து வைத்தி ருக்கிறார்கள்

என்று விமான நிலைய ஊழியர்க ளும் போலீசாரும் ஆச்சரிய ப்பட்டுப் போனார்கள்.
அஜித்தைப் பார்க்க நள்ளிரவில் விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !  அஜித்தைப் பார்க்க நள்ளிரவில் விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on December 01, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close