EThanthi - ரஜினி நடித்துள்ள "பேட்ட" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

Flash News

ரஜினி நடித்துள்ள "பேட்ட" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்து 
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தைத் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் ரிலீசாக பேட்ட வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் வினியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தாணு அதிக விலை கொடுத்து வாங்கி யிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இவர் ஏற்கனவே ரஜினியின் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். 

தற்போது இவர் கைவசம் பேட்ட படம் செல்வதன் மூலம் அதன் பிரம்மாண்ட விளம்பரங்கள் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால், இது முற்றிலும் வதந்தி என விளக்க மளித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. 

'சன் பிக்சர்ஸ் இன்னும் பேட்ட படத்தின் பிஸ்னஸை ஆரம்பிக்க வில்லை. அப்படி ஆரம்பிக்கும் போது இது தொடர்பாக பேசலாம் என தெரிவித்த தாணு .

இப்போது நான் அதனை வாங்கியதாக வெளியான தகவலில் துளியும் உண்மை யில்லை' என அவர் தெரிவித் துள்ளார்.

மேலும் கூறிய அவர், சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கும் அனைத்து படங்களையும் தானே வெளியிடுவது இல்லை. 

வினியோக உரிமையை மற்ற தயாரிப்பா ளர்களிடம் அளித்து வருகிறது.
அந்த வகையில் பேட்ட படத்தின் வினியோக உரிமையும் வேறொரு தயாரிப்பா ளரிடம் அளிக்கப் படலாம் எனத் தெரிகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
ரஜினி நடித்துள்ள "பேட்ட" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ! ரஜினி நடித்துள்ள "பேட்ட"  - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ! Reviewed by EThanthi.in on November 24, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close