EThanthi - நடிகை சுஜா வாருணி திருமணம் !

Flash News

நடிகை சுஜா வாருணி திருமணம் !

நடிகை சுஜா வாருணி - நடிகர் சிவாஜிதேவ் என்கிற சிவகுமார் திருமணம் இன்று காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்றது.
தமிழில், பிளஸ் 2, வாத்தியார், நாளை, அம்முவாகிய நான், பழனி, சண்டை, பென்சில், கிடாரி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜா வாருணி. 

இவருக்கும், ‘சிங்ககுட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்த சிவாஜி தேவ் என்கிற சிவகுமாரு க்கும் காதல் இருந்து வந்தது.
சிவாஜி தேவ், சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன். 

இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம், இன்று காலை சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்தது. 

இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் பற்றி பேசிய நடிகை சுஜா, ‘நானும், சிவாஜி தேவும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். 

முதலில் நட்பாக பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினோம்.
எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில் தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப் பட்டது. 

திருமணத்து க்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பேன்’ என்று முன்னர் கூறியிருந்தார்.
நடிகை சுஜா வாருணி திருமணம் ! நடிகை சுஜா வாருணி திருமணம் ! Reviewed by EThanthi.in on November 22, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close