EThanthi - அரைகுறை ஆடையில் நடு இரவில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல் !

Flash News

அரைகுறை ஆடையில் நடு இரவில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல் !

சிகரெட்ஸ் கேட்டு அரைகுறை ஆடையுடன் ரகளை செய்த மும்பை மாடல் ஒருவர் சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறார்.
மும்பையை சேர்ந்தவர் மேகா சர்மா. இவர் ஒரு மாடல். மும்பையின் முக்கியமான பகுதியிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

மிக சாதாரணமான மாடலான இவர் இன்று மும்பை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். 
காரணம் அவர் குறித்து சமூக வலைத் தளத்தில் வெளியான வீடியோ. அந்த வீடியோ வெளியான சற்று நேரத்திற்குள் அவர் வைரலானார்.

காரணம்; அந்த வீடியோவில் அவர் இருந்த விதம். அரை குறையாக ஆடைகளை கழற்றி போட்டபடி அவர் செய்த ஆர்ப்பாட்டம் அந்தளவுக்கு அவரை வைரலாக்கியது.

முதலில் அவர் குறித்து வெளியான வீடியோவை பற்றி எந்தத் தகவலும் இல்லை. 

அவரை சுற்றி இரண்டு போலீஸ்கள் நிற்க கூடவே ஒருசில செக்யூரிட்டிகள் இருக்க, 

அவர் மட்டும் அரை குறையான குளியல் உடையில் கதறிக் கொண்டிருந்தார்.

அவர் சத்தம் போடுவதை பார்த்த சமூக வலைத்தள வாசிகள் அவருக்கு என்னமோ ஏதோ என்று வைரல் செய்தனர். 

அவருடன் மும்பை போலீஸ் இருக்கும் போதே அவர் ஏன் அரை நிர்வாணமாக இருக்கிறார்.

அவரது உடைகளை கழற்றியவர்கள் யார்? அவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்துக் கொள்வது பற்றி பதறிக் கொண்டிருந்தனர்.

முதல் வீடியோ பற்றியே ஒன்றும் தெரியாத போது அடுத்து இரண்டாவது வீடியோ ஒன்று வெளியானது. 
அதில் மேகா சர்மா, அவர் குடியிருப்பின் வரவேற்பறை யில் ஒரு செக்யூரிட்டி உடன் சண்டை இடுகிறார்.

அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டுள்ள போதே மேகா, அந்த செக்யூரிட்டியை கன்னத்தில் அறைகிறார். 

அதன் மூலம் சண்டை வலுக்கிறது. இருவரும் சண்டை யிட்டபடி தெருவுக்கு செல்கிறார்கள்.

அங்கே இருவர் வந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள். ஆனாலும் மேகா ஆக்ரோஷமாக சண்டை யிடுகிறார். 

அந்த வீடியோவின் பின்புலம் என்ன என்பது குறித்தும் எந்த விவரங்களும் வெளியாக வில்லை.

அதன் பிறகு இன்னொரு வீடியோவில் அவரது வீட்டு லிப்டில் காவல் துறையினர் முன் அவர் தனது உடைகளை கலைத்துப் போட்டு ரகளையில் ஈடுபடுகிறார். 

அந்த வீடியோவில் உள்ள மும்பை காவலர்கள் செய்வதறியாது தவிப்பதும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் மேகா இந்தச் சண்டை குறித்து இப்போது விளக்கம் அளித்துள்ளார். 

டைம்ஸ் ஆப்ஃ இந்தியா மற்றும் வடமாநில ஊடங்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

வீட்டில் தான் தனியாக இருந்ததாகவும், அப்போது தனக்கு சில சிகரெட்ஸ் தேவை பட்டதாகவும் 

அதை வாங்கி வர சொல்லி இண்டர்காமில் செக்யூரிட்டியை கேட்டதாகவும் 

அப்போது அந்தக் காவலர் முடியாது என்று மறுத்ததோடு அநாகரிகமாக பேசியதாகவும் அதற்காவே அவரை அடித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
நான் குடியிருக்கும் வீட்டில் பல செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட நான் கேட்ட சிகரெட்டை வாங்கி தரவில்லை.

இரவு ஒரு மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே செல்ல முடியுமா? நான் அப்போது கொஞ்சம் மது அருந்தி வேறு இருந்தேன். 
அப்படி இருக்கையில் எப்படி போக முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் சண்டை நடந்த போது காவல் துறையினர் வந்து புகார் அளிக்க காவல் நிலையம் வர சொன்னார்கள். 

அப்போது வந்த இரு காவலர்களும் ஆண்கள். அவர்களை நம்பி நடு ராத்திரியில் எப்படி போக முடியும். 

பெண் காவலர்கள் வந்தால் வருகிறேன் என்றேன். அல்லது காலையில் புகார் அளிக்கிறேன் என்றேன். ஆனால் அவர்கள் செல்ல வில்லை. 

ஆகவே உடைகளை கழற்றி போட்டு சர்ச்சை செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார் மேகா.

பெண் ஒருவர் பலர் குடியிருக்கும் அடுக்கு மாடி கட்டடத்தில் இப்படி அரைகுறை ஆடையோடு சர்ச்சையில் ஈடுபட்டதும் 
இல்லாமல் சிகரெட் கேட்டு ரகளை செய்தது இப்போது தான் சமூக வலைத்தள வாசிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஆகவே முதலில் மேகாவை ஆதரித்த அவர்கள் இப்போது அவரை விமர்சிக்க தொடங்கி யுள்ளனர்.
அரைகுறை ஆடையில் நடு இரவில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல் ! அரைகுறை ஆடையில் நடு இரவில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல் ! Reviewed by EThanthi.in on November 22, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close