EThanthi - ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி வதந்தி - செய்தி தொடர்பாளர் விளக்கம் !

Flash News

ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி வதந்தி - செய்தி தொடர்பாளர் விளக்கம் !

ரஜினிகாந்த் நலமாக உள்ளார், அவரது உடல் நிலை பற்றி சமூக வலைத் தளங்களில் 
வெளியாகும் தகவல்கள் தவறானவை என அவரது தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெரிய எதிர் பார்ப்புகளோடு அடுத்த வாரம் வெளியாக உள்ளது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் 
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகியுள்ள 

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

ஏறகுறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக் காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண் டுள்ளனர்.

இதனிடையே, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தம்முடைய ரசிகர்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக ரஜினி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், ரஜினிக்கு உடல் நிலை சரியில்லை என சமூக வலைத் தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தது. 

இதனை யடுத்து, ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் 
தகவல்கள் தவறானவை என அவரது செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தவறான செய்திகள் சமூக வலைத் தளங்களில் பரவிவரும் நிலையில் வதந்திகளை 

நம்ப வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி வதந்தி - செய்தி தொடர்பாளர் விளக்கம் ! ரஜினிகாந்த்  உடல் நிலை பற்றி வதந்தி - செய்தி தொடர்பாளர் விளக்கம் ! Reviewed by EThanthi.in on November 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close