கொதித்தெழுந்த கஸ்தூரி - ஒழுங்கா டிரஸ் போடு அப்புறம் வந்து பேசு !
சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து நடிகை கஸ்தூரி அதிரடியாக டிவீட் போட்டுள்ளார்.
சென்னை காட்டாங் கொளத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார்.
அந்த லிப்டில் அதே கல்லூரியை சேர்ந்த பணியாளர் ஒருவரும் வந்துள்ளார்.
லிப்டில் இருவர் மட்டுமே இருந்த நிலையில், அந்த பணியாளர் திடீரென தனது துணியை அவிழ்த்து சில கீழ்த்தரமான வேலைகளை செய்துள்ளான்.
அது மட்டுமில்லாமல் அந்த மாணவியின் துணியையும் அவிழ்க்க முயன்றுள்ளான்.
இதனால் அதிர்ந்து போன மாணவி கூச்ச லிட்டுள்ளார். பயந்து போன அந்த பணியாளர் லிப்டி லிருந்து இறங்கி தப்பித் துள்ளான்.
இது குறித்து அந்த மாணவி ஹாஸ்டல் வார்டனிடம் முறையிட்ட போது அவர் நீ ஒழுங்கா டிரஸ் போடலனா இப்படித் தான் செய்வாங்க என கூறியுள்ளார்.
இதனால் அந்த மாணவி அதிர்ந்து போனார். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து
WTF. Man masturbated at student in elevator. When she complained , the hostel warden insinuated that she deserved what she got because of the way she was dressed!!!??? https://t.co/0eMiEMCUw7— Kasturi Shankar (@KasthuriShankar) November 22, 2018
சம்மந்தப்பட்ட பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்ட த்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒருத்தன் லிப்டல பொண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்திருக்கான்.
அவன கண்டிக்காம அந்த வார்டன் ஒழுங்கா டிரஸ் போடலனா கை வைக்க தான் செய்வாங்க ன்னு சொல்லி இருக்காங்க..
இது மட்டமான செயல் என ஆவேசமாக கூறியிருக் கிறார்.



No comments