EThanthi - ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதில் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து !

Flash News

ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதில் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து !

ட்விட்டரில் ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதிலால் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துகள் குவிந்தது. 
இது குறித்து நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டு இருக்கிறார் பிரசன்னா

சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் பிரசன்னா. 

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கான ப்ரமோ வீடியோ, கடந்த செவ்வாய்க் கிழமை (நவம்பர் 20) வெளியானது. 

அதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போது, சிறப்பு விருந்தினராக பிரசன்னா கலந்து கொண்டார்.

ஆனால், தற்போது பிரசன்னா நிகழ்ச்சித் தொகுப்பாளராக நிற்க, சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் 

என்பது போன்ற மீம்ஸை உருவாக்கி, சமூக வலை தளங்களில் பரவ விட்டனர். 
மேலும், பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு  “இதோ என் கருத்து. சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். 

பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது.

அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுது போக்குக் கலைஞரில் ஒருவர்” என சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் “அன்புள்ள சீனி, நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். 

அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக் கொள்ள இடமிருக்கிறது.
நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றி பெற இன்னும் அவகாசம் உள்ளது. 

வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவரு க்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும்.

வெறுப்பை/அன்பைச் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒரு நாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” எனத் தெரிவித்தார்.
பிரசன்னாவின் பதிலுக்கு ட்விட்டர் பக்கத்திலுள்ள பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். 

யாருடைய மனமும் புண்படாத வகையில், ரொம்ப அழகாக பதிலளித் துள்ளீர்கள் என்று 

பலரும் கூறவே பிரசன்னாவின் ட்வீட் இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்கியது.

தனது பதிலுக்கு கிடைத்த வாழ்த்து தொடர்பாக “ஒரு சிறிய விஷயத்தை நான் செய்ததற்காக எவ்வளவு அன்பை திருப்பித் தருகிறீர்கள். 

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த மீமை உருவாக்கிய வருக்கும் ஸ்ரீனிக்கும் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

இதை நான் சற்றும் எதிர் பார்க்க வில்லை. இதற்கு முன்னதாக மக்களிட மிருந்து இவ்வளவு அன்பைப் பெற்றதில்லை. 
நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் மிகவும் மனம் நொந்திருக்கும் வேளையில் இது எனது உற்சாகத்தை கூட்டி யிருக்கிறது. 

எனக்குக் கிடைத்த வைட்டமின்” என்று நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டு இருக்கிறார் பிரசன்னா.
ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதில் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து ! ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதில் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து ! Reviewed by EThanthi.in on November 26, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close