விஜய் குறித்து ஸ்ரீமன் - 22 வருட கால நட்பு
நடிகர் விஜயின் புதிய புகைப்படம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் புதிய படத்தினை அட்லி இயக்கி வருகிறார்.
அந்த அறிவிப்பு வெளியானது முதலே யார், யார் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என எதிர்ப் பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடன் இருப்பதை போல ஒரு புதிய படத்தை வெளியிட் டுள்ளார்.
அந்தப் படத்தில் விஜய் சமீபத்திய தோற்றத்தில் இருக்கிறார்.
இப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ரீமன், “எந்த நேரம் சந்திக்கும் போதும் நேர் மறையான எண்ணத்தை கிரகித்து கொள்கிறேன்.
இது இரு அற்புதமான பயணம்.
எங்களுக்குள் 22 வருட கால நட்பு. என்னை ஆதரிப்பதற் காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வழி க்காட்டுதல், பாராட்டுதல், உங்களின் தன்னடக்கம், எளிமை, அமைதி, சத்தமே இல்லாமல்
உதவும் மனம் மேலும் சாதுவாக வேலை பார்க்கும் மந்திரம் எல்லாம் அருமை.
விஜய் உங்களை நேசிக்கிறேன். இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்” எனக் கூறி யிருக்கிறார்.



No comments