வடசென்னை' படத்தில் இருந்து பல காட்சிகள் நீக்கம்? - வெற்றி மாறன் !
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து திரைக்கு வந்தப்படம் வடசென்னை.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும் திரையுலக பிரபலமான இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான்,
ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர்
சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் ‘வடசென்னை’ படத்தில் ஆபாச வசனங்கள் நிறைய உள்ளது என்று புகார் அளித்துள்ளார்.
சமூக அக்கறை இல்லாமல் பார்வை யாளர்களின் மனதை புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கில்
இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதியுள்ளார் என்று குற்றசாட்டு எழுந்தது.
இதைதொடந்து, வடசென்னை படத்தில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சை காட்சிகள் 7 முதல் 10 நாட்களில் நீக்கப்படும் என்றும்,
எங்களது நோக்கம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு எதிராகவும் சினிமா செய்வது அல்ல.
மனம் புண்படும் படி உள்ளதாக கூறப்படும் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்தள்ளோம்.
அதற்காக தணிக்கைக் குழுவை நாடி உள்ளோம். 10 நாட்களு க்குள் காட்சி நீக்கப்படும் என்று கூறினார்.
மேலும், வடசென்னையின் கதாபாத்திரமோ, சம்பவமோ யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால்
அவா்களிடம் வருத்தம் தொிவித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.




No comments