சமந்தாவின் ட்வீட்டால் அதிர்ச்சியான ரசிகர்கள் !
சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிறகு தெலுங்கில் இதே படத்தை நானி, சமந்தா நடிப்பில் கவுதம் மேனன் எடுத்தார்.
தெலுங்கிலும், மிகப்பெரிய வெற்றி பெற்றது. காதல் படமான இதில் திரிஷாவுக்கும் சமந்தாவு க்கும்
யார் நல்ல முறையில் ஜெஸ்சி வேடத்தை கொண்டு வருவது என போட்டியே நடந்தது. மீண்டும் இதேபோன்ற போட்டி உருவ இருக்கிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் "96" வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக் கிறது.
இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சி பிரேம் குமார் இந்த படத்தை இயக்கி யுள்ளார்.
96 படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி இப்படத்தில், பள்ளி பருவ மையக் காதலை மையமாகக் கொண்டதாக கட்டப் பட்டுள்ளது.
இந்நிலையில், 96 படத்தை தெலுங்கில் நானி வாங்கி நடிக்க இருக்கிறார்.
இதில் திரிஷாவின் கதா பாத்திரத்துக்கு சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதைப் பற்றி ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு,
பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறு உருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறி இருக்கிறார்.




No comments