தாய்லாந்திற்கு போகும் விஜய்சேதுபதி !
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் (இன்னும் பெயர் வைக்கப்பட வில்லை).
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்தில் வைத்து நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியரும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிய அருண்குமார்.,
தற்போது விஜய் சேதுபதியை வைத்து இரண்டாவது படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இந்த திரைப்படமானது வெற்றி யடைந்ததை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.
இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து திரையான சேதுபதி திரைப்படம் மக்களிடையே
நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., தற்போது இணைந்துள்ள இவர்களின் கூட்டணியை எதிர் பார்த்து இருக்கின்றனர்.
நடிகர் விஜய்சேதுபதியும் நடிகை அஞ்சலியும் இறைவி திரைப் படத்திலேயே அறிமுகமானவர் என்பதால்
இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்த விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இந்த திரைப்படத்தை கே ப்ரோடுக்ஷன்ஸ் மற்றும் யு1 ரெக்கார்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக் கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது தென்காசி., குற்றாலம் பகுதியில் நடைபெற்று முடித்த நிலையில்.,
தற்போது தாய்லாந்தில் படமாக்கப் படுவதாக படக்குழு தெரிவித்தது.



No comments