EThanthi - சீமான் - சாட்டையை சுழற்றுகிறார் - ஸ்ரீரெட்டிக்காக !

Flash News

சீமான் - சாட்டையை சுழற்றுகிறார் - ஸ்ரீரெட்டிக்காக !

கவிப்பேரரசு வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த 
கேள்விக்கு சீமான் பதிலளிக்கை யில், பெண்களைப் போற்றிக் கொண்டாட வேண்டியது மனிதக் கடமை.

அவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஆண் மகனின் பிறவிக்கடன். 

இன்றைக்கு அவர்களைக் காக்க தனிக்குழு அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடானது.
சகோதரி சின்மயி விவகாரத்தில் தம்பி சித்தார்த் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். 

ஸ்ரீரெட்டி என்கிற பெண்மணி, பெயரைக் குறிப்பிட்டு ஒவ்வொருவர் மீதும் பாலியல் புகார் கூறிய போது ஏன் அது குறித்து இவர்கள் வாய் திறக்க வில்லை.?

சின்மயிக்காகப் பேசுகிற இவர்கள், அந்தப் பெண்ணுக்காக ஏன் பேசவில்லை? 

ஆசீபா என்கிற 8 வயது மகளை எட்டு பேர் ஒரு வாரத்திற்கு மேலாக கோயில் கருவறையில் வைத்துப் 

பாலியல் வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்தபோது இவர்கள் குரல்வளை எழவில்லையே ஏன்?

வடநாட்டில் வயதான பெண்மணியை நிர்வாணமாக ஓடவிட்டு எட்டி உதைத்த காணொளியை பார்த்தோமே, 

அப்போது அவருக்காக ஏன் இவர்கள் குரல் கொடுக்க வில்லை? உத்திர பிரதேசத்தில், 

தனது மகளை வன்புணர்ச்சி செய்து விட்டார்கள் என்று புகார் கொடுக்கச் சென்ற தந்தையை, 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் கொலை செய்தாரே அதற்கு இவர்கள் என்ன எதிர் வினை யாற்றினார்கள்? 

இந்த நிலத்தில் தூத்துக்குடி யில் தங்கை புனிதாவை வன்புணர்ச்சி செய்தார்கள்.

இதுபோன்ற பல பாலியல் வன்புணர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது எதற்குமே இவர்கள் பேச முன் வருவதில்லையே ஏன்?
சகோதரி சின்மயி அவர்கள் பிராமணச் சங்கத்தலைவர் ஐயா நாராயணன் மீதும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கி றார்கள். 

அது குறித்து எவரும் இங்கும் பேசுவ தில்லை. எல்லாக் குரல்களும், விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டுமே நீள்கிறதே காரணமென்ன? 

இதனால் தான், நாங்கள் இதனைப் பேச வேண்டியிருக்கிறது.

#MeToo அமைப்பு மூலம் யார் வேண்டு மானாலும் யாரையும் குற்றஞ்சாட்டி, பெயரைக் களங்கப் படுத்திவிடக் கூடிய ஒரு வாய்ப்பிருக்கிறது. 

நாளை குற்றஞ் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கலாம்.

அதற்குள்ளாக எல்லோரும் இதனை விவாதித்து அவருக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்து விடுவார்கள் என்பது இதிலிருக்கும் பெரும் சிக்கல். 

இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள் என்கிறார் சகோதரி சின்மயி.

அப்படியானால், இதனைப் பதிவிடுவதன் மூலம் எதனைச் சாதிக்க நினைக்கிறார்? 

அவரது உள்நோக்கம் வைரமுத்துவை இழிவுப் படுத்தலாம் என்பதைத் தாண்டி வேறென்ன?

15 ஆண்டுகளாக வைரமுத்து மீதானக் குற்றஞ்சாட்டை முன் வைக்காததற்கு, அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கு தான் காரணம் என்கிறார்.

இப்போது வைரமுத்துவை எதிர்க்கிற அளவுக்கு தனக்கு அரசியல் செல்வாக்கு வந்து விட்டது எனக் கூறவருகிறாரா? 

முன்பைவிட வைரமுத்துவு க்கு இப்போது தானே செல்வாக்கு கூடியிருக்கிறது.

வைரமுத்துவை வெறுமனே பாடலாசிரியர், கவிஞர் என்று சுருக்கி விட முடியாது. 

அவர் தமிழினத்தின் ஓர் அடையாளம். அதனைச் சிதைத்து அழித்து இழிவுப்படுத்த எண்ணுவதை ஏற்க முடியாது.

தமிழர்களுக்கு இருக்கும் பெருமைகள், அடையாளங்களை யெல்லாம் திட்டமிட்டு அசிங்கப் படுத்தி ஒன்று மில்லாமலாக்கு வதை இனியும் ஏற்க முடியாது.

பெண்களைக் காக்க வேண்டும் என்பதிலும், பெண்ணிய உரிமைகளுக்காக நிற்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

விஷால் இதற்காகக் குழு அமைப்பதாகக் கூறுவதை வரவேற்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான மத்தியப் புலனாய்வு விசாரணையை வரவேற்கிறோம். 

முன்பெல்லாம் பதவியில் இருப்பவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டால் குற்றஞ் சாட்டப்பட்டவர் அப்பதவியி லிருந்து 

விலகி தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து விட்டு பதவியைத் திரும்ப ஏற்றுக் கொண்ட நாகரீகம் இருந்தது.
அரியலூரில் நடந்த விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகிய சம்பவ மெல்லாம் இந்நாட்டில் நடந்திருக்கிறது. 

அதே போன்று குற்ற உணர்வோடு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுகிற அளவுக்கு இன்றைக்கு உண்மையும், நேர்மையு மில்லை.

எல்லா வற்றையும் தூசி போலத்தட்டி கடந்து போகிற இழிநிலை தான் இங்கிருக்கிறது இவ்வாறு சீமான் கூறியுள்ளார்
சீமான் - சாட்டையை சுழற்றுகிறார் - ஸ்ரீரெட்டிக்காக !  சீமான் - சாட்டையை சுழற்றுகிறார் -  ஸ்ரீரெட்டிக்காக ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close