சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து !
திமுக தலைவர் கருணாநிதி யின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவ மனையின் ஏழாவது அறிக்கை வெளியானது.
அதில் கருணாநிதி யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், உறுப்புகள் செயலிழந்து
வருவதாகவும், நிலையற்ற தாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும், இன்று திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்,
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதனையும் சந்தித்துள்ளார்.
இந்த செய்திகளின் அடிப்படையில், மு.கருணாநிதி யின் உடல் நிலையை கருத்தில் கொண்டு
இன்று நடக்க விருந்த சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
இன்று மாலை சென்னையில் நடைபெற இருந்த பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து இயக்கி
நடித்துள்ள ஆருத்ரா திரைப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப் பட்டுள்ளது.
அதே போல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும்
ஓம் திரைப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
மேலும் மற்றும் சில சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
கலைஞரின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
தன்னுடய மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன் கலைஞரிடம் ஆசிபெற்றார்.
அதனால், விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது கருணாநிதி யின்
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ரிலீஸ் தள்ளிப் போடப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.



No comments