EThanthi - நல்லெண்ணெய் சித்ராவின் புதிய பிரவேசம் வருமா?

Flash News

நல்லெண்ணெய் சித்ராவின் புதிய பிரவேசம் வருமா?

தொண்ணூறுகளில் கதாநாயகியாகவும் தங்கை, அக்கா, அண்ணி பாத்திரங் களிலும் தவறாமல் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. 
என் தங்கச்சி படிச்சவ, சேரன் பாண்டியன், ஊர்க்காவலன் என பல படங்களில் நடித்தவர். 

குறிப்பாக நடிகை ஜோதிகாவுக்கு முன்பாக நல்லெண்ணய் விளம்பரத்தில் நடித்து நல்லெண்ணெய் சித்ரா என ரசிகர்களிடம் பாப்புலரானவர்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு திடீரென விலகியவர், 
தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக தனது ஆசையை வெளிப்படுத்தி யுள்ளார். 

"எனது அம்மா இறந்தபின், என தந்தை இரண்டு கிட்னிகளும் பழுதான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டார்.. 

தான் கண் மூடுவதற்குள் என் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என தந்தை விரும்பினார். 

அதனால் திருமணம் செய்து கொண்டபின் நடிப்பை விட்டு ஒதுங்கினேன்.

கணவரின் சம்மதத்துடன் இரண்டு படங்களில் நடித்தாலும், குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் நடிப்பை கைவிட்டேன்.

இப்போது மீண்டும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க விரும்புகிறேன்" என கூறியுள்ளார் சித்ரா.
நல்லெண்ணெய் சித்ராவின் புதிய பிரவேசம் வருமா? நல்லெண்ணெய் சித்ராவின் புதிய பிரவேசம் வருமா? Reviewed by EThanthi.in on August 01, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close