'கடைக்குட்டி சிங்கம்' பாராட்டு விழாவில் திட்டு வாங்கிய சாயிஷா, பிரியா !
கடைக்குட்டி சிங்கம்' படம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக் கிறது.
அதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி விழாவை இன்று நடத்தினார்.
சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற விழாவில் படத்தில் நடித்தவர்கள்,
தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தி னருடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ், படத்திற்காக பட்ட பல கஷ்டங்களைச் சொன்னார்.
அதோடு, பட வெளியீடு சமயத்தில் படத்திற்காக பிரச்சினை செய்த 'பீட்டா' அமைப்பைப் பற்றியும் கடுமையாகப் பேசினார்.
அவருடைய கோபம் அத்துடன் நிற்கவில்லை. படத்தின் முக்கியமான நாயகிகளான சாயிஷா, பிரியா பவானி சங்கர் மீதும் இருந்தது வெளிப் பட்டது.
பிரியா பவானி சங்கர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரவேயில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதோடு, பிரியா, சாயிஷா இருவருமே படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி களுக்கு வரவேயில்லை என்றார்.
அடுத்த படத்திலாவது அவர்கள் படத்தின் பிரமோஷனுக்குச் சரியாகச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று நடைபெற்ற விழாவில் படத்தில் நடித்த பலரும் பாராட்டைப் பெற்ற சமயத்தில் சாயிஷா,
பிரியா இருவருக்கும் இயக்குனரிடம் இருந்து கிடைத்த திட்டு நிச்சயம் அவர்களை சங்கடப்படுத்தி இருக்கும்.



No comments