கருணாநிதிக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி !
திமுக தலைவர் கருணாநிதி யின் உடலுக்கு ரஜினிகாந்த் தனது குடும்பத்தா ருடன் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார்.
அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டுள்ளது.
கருணாநிதி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களும், பிரபலங்களும் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் தனது மனைவி லதா, இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்து கருணாநிதி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர்கள் டி. ராஜேந்தர், பிரசன்னா, வையாபுரி, விவேக், நடிகைகள் சினேகா, காயத்ரி ரகுராம்
ஆகியோரும் கருணாநிதி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதி யின் உடலை பார்த்ததும் டி. ராஜேந்தர் அழுது விட்டார்.



No comments