EThanthi - காற்றின் மொழி இயக்குநருக்கு ஜோதிகா அனுப்பிய மெஸேஜ் !

Flash News

காற்றின் மொழி இயக்குநருக்கு ஜோதிகா அனுப்பிய மெஸேஜ் !

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் காற்றின் மொழி. விதார்த், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு, 
குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா நடிக்கும் இந்த படம் ஹிந்தியில் வெளியான தும்ஹரி சுலு படத்தின் ரீ-மேக்.

பாஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 4-ஆம் தேதி துவங்கியது. 

ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதியுடன் முடி வடைந்தது.
இடை விடாமல் நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் சம்பந்தப் பட்ட காட்சிகளிலும் நடித்து கொடுத்து விட்டார் ஜோதிகா. 

இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மற்ற நடிகர், நடிகைகள் சம்பந்தப் பட்ட காட்சிகளுடன் தொடர்கிறது.

மொழி படத்தை தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் என்பதால் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்ததாம். 

அதனால் பல நாட்கள் டபுள் கால்ஷீட்டில் கூட நடித்துக் கொடுத்திருக் கிறார் ஜோதிகா.

காற்றின் மொழி படத்தில் நடித்து முடித்த பிறகு நல்ல படத்தில் நடித்த அனுபவத்தைக் 

கொடுத்ததற்கு நன்றி என்று இயக்குநர் ராதா மோகனுக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக் கிறார் ஜோதிகா.
காற்றின் மொழி இயக்குநருக்கு ஜோதிகா அனுப்பிய மெஸேஜ் ! காற்றின் மொழி இயக்குநருக்கு ஜோதிகா அனுப்பிய மெஸேஜ் ! Reviewed by EThanthi.in on July 31, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close