EThanthi - உண்மை சம்பவம் படமாக உருவாகி இருக்கும் அந்த நிமிடம் !

Flash News

உண்மை சம்பவம் படமாக உருவாகி இருக்கும் அந்த நிமிடம் !

ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி யிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’. இந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதா நாயகியாக நடித்திருக்கிறார். 
உண்மை சம்பவம் படமாக உருவாகி இருக்கும் அந்த நிமிடம்

வில்லனாக லால் வீரசிங், போலீஸ் அதிகாரியாக சன்ன பெராரா ஆகியோர் நடித்திருக்கி றார்கள். ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டு மில்லாமல், மற்ற குடும்பத்தி னரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘அந்த நிமிடம்’ உருவாக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி,.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர் களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சிங்கமச்சான் சாலி’, ‘லீடர்’, ‘கோத்ரா’ போன்ற சிங்களப் படங்களை இயக்கியவர். முதல் முறையாக ‘அந்த நிமிடம்’ படத்தை தமிழில் இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுக மாகிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற் கான அனைத்து கட்ட படப்பிடிப்பு களும் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப் பட்டிருக்கிறது. தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத் திருக்கிறார்.
உண்மை சம்பவம் படமாக உருவாகி இருக்கும் அந்த நிமிடம் ! உண்மை சம்பவம் படமாக உருவாகி இருக்கும் அந்த நிமிடம் ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close