EThanthi - நடிகர் சங்க கட்டடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பெயரா? - விஷால் !

Flash News

நடிகர் சங்க கட்டடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பெயரா? - விஷால் !

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வின் 

பெயர் வைக்கப் படுமா என்று கேள்விக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். 

ஜெயலலிதா வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா வில் உள்ள அவரது நினை விடத்தில் விஷால் மரியாதை செலுத்தினார். 

அவருடன் சில ஆதர வாளர்கள் உடன் வந்தனர். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய விஷால்,

"ஜெயலலிதா செய்த நல்ல விஷயங்கள் இன்னும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. 

அவருக்கான நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, மக்கள் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். ஜெயலலிதா வின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. 

வாழும் போது எப்படி சிரித்துக் கொண்டிருந் தாரோ, அதே போல், அவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டும். 
நடிகர் சங்க கட்டட திறப்பு விழாவின் போது வருகிறேன் என எங்களிடம் கூறி யிருந்தார். 

ஆனால், அவர் இல்லாதாது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று கூறினார்.
நடிகர் சங்க கட்டடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பெயரா? - விஷால் !  நடிகர் சங்க கட்டடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பெயரா? - விஷால் ! Reviewed by EThanthi.in on December 05, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close