EThanthi - காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம் !

Flash News

காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம் !

மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது பற்றி ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
கவச்சம் தெலுங்கு பட டீஸர் வெளியீட்டு விழா மேடையில் காஜல் அகர்வாலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு. 

இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்தாலும் சிரித்து மழுப்பி விட்டார்.
சோட்டா காஜலை முத்தமிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.

ரசிகர்கள்

பொது இடத்தில் சோட்டா இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதை பார்த்த காஜல் அகர்வாலின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். 

இந்த ஆள் என்ன இப்படி நடந்து கொள்கிறார், காஜலும் ஒன்னும் சொல்லாமல் விட்டு விட்டாரே என்ற விமர்சனம் எழுந்தது. 

இது மீ டூ சம்பவம் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர். பலர் சோட்டா நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சோட்டா

சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சோட்டா நாயுடு. 

மறைந்த நடிகை சவுந்தர்யா வுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை காஜல் அகர்வால். 

காஜல் அகர்வாலுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். 

அவருடன் சேர்ந்து பல படங்களில் பணியாற்றி யுள்ளேன் என்கிறார் சோட்டா.
முத்தம்

என்னை தன் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார் காஜல் அகர்வால். டீஸர் வெளியீட்டு விழா எங்களுக்கு கொண்டாட்ட நேரமாக இருந்தது. 
அவர் அண்மையில் ஒப்புக் கொண்ட ஒரு படம் பற்றி என்னிடம் தெரிவித்தார். 

அதனால் அவரை பாராட்டும் விதமாக முத்தம் கொடுத்தேன். இதெல்லாம் சாதாரண விஷயம் என்று சோட்டா தெரிவித்துள்ளார்.

இப்படியா?
டோலிவுட்டில் காஜல் அகர்வாலுக்கு நல்ல பெயர் உள்ளது. ரொம்ப பொறுமையான பொண்ணு என்று பெயர் எடுத்துள்ளார். 

அதற்காக சோட்டா செய்த செயலை இப்படியா பொறுத்துக் கொள்வது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

மீ டு வேகம் எடுத்துள்ள நேரத்தில் சோட்டாவை சும்மா விடலாமா என்று பலரும் சமூக வலை தளங்களில் குமுறுகிறார்கள்.
காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம் ! காஜலை முத்தமிட்டது பற்றி ஒளிப்பதிவாளர் விளக்கம் ! Reviewed by EThanthi.in on November 18, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close