EThanthi - புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் உதவி !

Flash News

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் உதவி !

கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங் களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,

1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன.
புயலில் பலியானவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவ ர்களுக்கு தலா ரூ.1 லட்சமும்,

சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும்

நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்து.

கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங் களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள்,

அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான
நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,

புயலில் சிக்கி உயிரிழந்த வர்களின் குடும்பங் களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய விருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் உதவி ! புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் உதவி ! Reviewed by EThanthi.in on November 19, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close