EThanthi - சீதக்காதி பட உரிமை - கைப்பற்றிய நிறுவனம் !

Flash News

சீதக்காதி பட உரிமை - கைப்பற்றிய நிறுவனம் !

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. 

பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்து வருகிறார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை Trident Arts நிறுவனம் சார்பில் ரவீந்திரன் கைப்பற்றி யுள்ளார்.
இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. 

படத்தை தீபாவளிக்கு பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தி ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் நடித்துள்ளனர். 

96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத் துள்ளார்.
சீதக்காதி பட உரிமை - கைப்பற்றிய நிறுவனம் !  சீதக்காதி பட உரிமை - கைப்பற்றிய  நிறுவனம் ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close