EThanthi - யோகி பாபு படத்தில் மாடல் எலிசா - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

Flash News

யோகி பாபு படத்தில் மாடல் எலிசா - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் யோகி பாபு. 
இவர் ‘கூர்கா’ படம் மூலம் கதாநாயகனாக தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள உள்ளார்.

‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா முதன்மை வேடத்தில் நடிப்பதாக சாம் ஆன்டன் தெரிவித்துள்ளார். 

இந்தக் கதாபாத்திரத்துக் கான தேர்வு சமீபத்தில் நடந்துள்ளது.
இவரது நடிப்புத் திறனைப் பார்த்து உடனடியாக இவரைத் தேர்ந்தெடுத்து விட்டோம். படத்தில் அமெரிக்க தூதராக நடிக்க உள்ளார். 

படத்தில் யோகி பாபுவுக்கும் எலிசாவுக்கும் இடையில் எந்த வித காதல் காட்சிகளும் கிடையாது.

ஆனால் படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க யுள்ளது என சாம் ஆன்டன் கூறியுள்ளார்.
யோகி பாபு படத்தில் மாடல் எலிசா - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ! யோகி பாபு படத்தில் மாடல் எலிசா - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close