EThanthi - விஷால் என் மகனை காப்பாற்றி யிருக்கலாம்’ - கார் டிரைவர் தந்தை !

Flash News

விஷால் என் மகனை காப்பாற்றி யிருக்கலாம்’ - கார் டிரைவர் தந்தை !

நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என பதவிகளை வகித்து வரும் நடிகர் விஷாலின் 
கார் ஓட்டுனர் பாண்டியராஜ், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப் பட்டிருந்த நிலையில் திடீர் என மரணம் அடைந்தார். 

இது குறித்து அவருடைய தந்தை கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி பார்ப்பவர் களையே கலங்க வைத்துள்ளது.

நடிகர் விஷாலிடம், கார் டிரைவராக பணியாற்றி வந்த பாண்டியராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். 

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரால், பெரிய மருத்துவ மனைக்கு சென்று சரியான சிகிச்சை எடுக்க முடியாத நிலை, 

ஆனால் இவருடைய உடல் நிலை பற்றி அறிந்தும் விஷால் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை என கூறப்படு கிறது.


இதனால், உடல் நிலை மிகவும் மோசமாக மாறி பாண்டியராஜ் மரண மடைந்தார். 

இவருடைய மறைவு குறித்து விஷால் கார் ஓட்டுனரின் தந்தை அளித்துள்ள பேட்டியில்” விஷால் நினைத்திருந் தால் என் மகனை காப்பாற்றி யிருக்கலாம்”. 

உரிய நேரத்தில் அவரிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காமல் போய் விட்டதாக கண்ணீர் மல்க கதறி யுள்ளார்.

ஊருக்கெல்லாம் ஓடி போய் உதவுவதாக கூறி வரும் விஷால், தன்னிடம் வேலை பார்த்த ஒருவர் உயிருக்கு போராடி வருவது தெரிந்தும், 

அவருடைய உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவாமல் இருந்ததை சமூக வலைத் தளத்தில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
விஷால் என் மகனை காப்பாற்றி யிருக்கலாம்’ - கார் டிரைவர் தந்தை ! விஷால்  என் மகனை காப்பாற்றி யிருக்கலாம்’ - கார் டிரைவர் தந்தை ! Reviewed by EThanthi.in on September 06, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close