EThanthi - ரெட்டியின் பட தலைப்புக்கு எதிர்ப்பு - தடை கேட்கும் வராகி !

Flash News

ரெட்டியின் பட தலைப்புக்கு எதிர்ப்பு - தடை கேட்கும் வராகி !

திரையுல பிரபலங்கள் மீது அடுக்கடுக் கான செக்ஸ் குற்றச் சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டி நடிக்கும் 
அவரது வாழ்க்கைப் படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.

முன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி 

செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

இந்நிலையில், ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி விட்டேன் என்று கூறிய அவர். 
தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. 

இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார்.

அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச் செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கி றார்கள். 

ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் களையும் படத்தில் காட்சி படுத்துகிறார்கள்.

மேலும், இந்த படத்துக்கு தடை விதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். 

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இது குறித்து கூறுகையில்,
“திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்து க்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது.

மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத் தக்கது.

இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப் பாளர்கள் சங்கம், 

திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்பு களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” என்றார்.
ரெட்டியின் பட தலைப்புக்கு எதிர்ப்பு - தடை கேட்கும் வராகி ! ரெட்டியின் பட தலைப்புக்கு எதிர்ப்பு - தடை கேட்கும் வராகி  ! Reviewed by EThanthi.in on September 06, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close