சினிமாவில் கமல்ஹாசனை ஓவர்டேக் செய்யும் தனுஷ் !
தலைப்பைப் பார்த்ததும் 'வட சென்னை' டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனுஷ் கொடுத்துள்ள
அழுத்தமான முத்தம் பற்றிய செய்தி என நினைத்து விட வேண்டாம். ஆனால், இதுவும் ஒரு அழுத்தமான பதிவு பற்றிய செய்தி தான்.
தமிழ் சினிமாவில் வித்தியாச மான படங்கள், கதா பாத்திரங்கள் என உலக அளவில் பெயர் எடுத்தவர் கமல்ஹாசன்.
அவருடைய 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது டிரைலரையே பின்னுக்குத் தள்ளி முன்னணியில் சென்று கொண்டிருக் கிறார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வட சென்னை' படத்தின் டீசர் நேற்று முன்தினம் யு டியூபில் வெளியானது.
24 மணி நேரத்திற் குள்ளாகவே அந்த டீசர் 30 லட்சம் பார்வை களைக் கடந்தது.
அதே சமயம், கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது டிரைலர் 11 லட்சம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது.
யு டியூப் டிரென்டிங்கிலும் 'வட சென்னை' டீசர் முதலிடத்தில் இருக்கிறது.
'விஸ்வரூபம் 2' இரண்டாவது டிரைலர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 'விஸ்வரூபம் 2' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்குள்ளாக கமல்ஹாசன் ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி னால் தான் 'விஸ்வரூபம் 2' பற்றி ஏதாவது ஒரு விஸ்வரூபம் கிளம்பும்.



No comments