EThanthi - இந்தியனுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன் - நடிகர் கமல்ஹாசன் !

Flash News

இந்தியனுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன் - நடிகர் கமல்ஹாசன் !

கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் ‘டூவண்டி 20 கிழக்கம் பாலம்’ என்ற அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு 300 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை ஏழைகளு க்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவரு மான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டின் சாவிகளை ஏழை மக்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் கமல்ஹாசன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘தற்போது இந்தியன்–2 படத்தில் நடித்து வருகிறேன். எனது திரையுலக பயணத்தில் இது கடைசி படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு வருகிற 14–ந் தேதி தொடங்கு கிறது. 

இந்தியன்–2 படப்பிடிப்பு முடிந்ததும் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன். நான் சினிமாவு க்கு முழுக்கு போட்டாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும்.

தேர்தலில் போட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அனைத்து தொகுதிக ளிலும் வேட் பாளர்கள் நிறுத்தப் படுவார்கள். மதசார்பற்ற கட்சிகளுடன் எதிர் காலத்தில் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன். 

மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபடுவேன்.

பணம் சம்பாதிக்க அரசியலும், அதிகாரமும் பயன்படுத்தப் படுகிறது. பணம் மட்டுமே சில அரசியல் வாதிகளின் இலக்காக இருக்கிறது. 

ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது மக்களுக்கு நல்லது செய்பவர்கள் இல்லாத நிலைமை இருக்கிறது.

அரசியல் மாற்றம்

அரசியலில் மாற்றம் வந்து கொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவை யானதை செய்ய அரசியல் வாதிகள் முன்வர வேண்டும். ஆனால் செய்ய முடியா ததையே அவர்கள் சொல்லி வருகிறார்கள். 

வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்கும். மதசார்பற்ற கட்சி மாநிலத்தில் ஆட்சி, அதிகாரத்து க்கு வர வேண்டும். மாநில மக்கள் சுதந்திரமாக வாழவும் உறுதி செய்ய வேண்டும். 

கேரளாவை எனது சொந்த வீடு போல் கருதுகிறேன். இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பினராயி விஜயன் தலைமை யிலான அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 

தமிழகத்தி லும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக மக்கள் நலனுக் காக உண்மையாக பாடுபடும்.’’ இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இந்தியனுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன் - நடிகர் கமல்ஹாசன் ! இந்தியனுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவேன் - நடிகர் கமல்ஹாசன் ! Reviewed by EThanthi.in on January 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close