EThanthi - நாசர் மகனின் ஆசையை நிறைவேற்றிய விஜய் - குவியும் பாராட்டு !

Flash News

நாசர் மகனின் ஆசையை நிறைவேற்றிய விஜய் - குவியும் பாராட்டு !

தன்னுடைய பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கி யுள்ளார் விஜய். 
இது தொடர்பான புகைப் படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். 

சில வருடங்களு க்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். 

அதிலிருந்தே வீட்டிலிருந்த படியே சிகிச்சை எடுத்து வருகிறார். பைசல் தீவிரமான விஜய் ரசிகர். 

இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலுடன் நேரம் செலவிட்டு வந்தார். 

இப்போது பைசல் நல்ல நிலைக்குத் திரும்பி யுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி பைசலுக்குப் பிறந்த நாள். 

தனது பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என விரும்பி யிருக்கிறார். 

இத்தகவல் விஜய்க்கு தெரிவிக்கப் படவே, கண்டிப்பாக என்று தெரிவித் திருக்கிறார்.

நேற்று (டிசம்பர் 1) ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார் விஜய். 

அப்போது நாசரின் வீட்டுக்கு திடீரென்று விஜயம் செய்து, பைசலுக்கு ஆச்சர்யம் அளித்தி ருக்கிறார். 

பைசலின் பிறந்த நாளை விஜய் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தி ருக்கிறார்.

இப்புகைப் படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 
“விஜய் அண்ணாவுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகி யுள்ளதே” என்று தெரிவித் துள்ளார்.

விஜய்யின் இந்தச் செயலால் சமூக வலை தளத்தில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மேலும், கமீலா நாசர் பகிர்ந்த புகைப் படங்களும் வைரலாகி வருகிறது.
நாசர் மகனின் ஆசையை நிறைவேற்றிய விஜய் - குவியும் பாராட்டு ! நாசர் மகனின் ஆசையை நிறைவேற்றிய விஜய் - குவியும் பாராட்டு ! Reviewed by EThanthi.in on December 03, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close