என்னால் அந்த குழந்தைகளுக்கு தாயாக இருக்க முடியாது - கரீனா கபூர் !
சயிஃப் அலிகானின் முன்னாள் மனைவியின் குழந்தை களுக்கு என்னால் தாயாக இருக்க முடியாது’ என நடிகை கரீனா கபூர் தெரிவித் துள்ளார்.
கரீனா
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் முதலில் அம்ரிதா சிங் என்ற நடிகையைத் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு சாரா அலிகான், இப்ராஹிம் அலிகான் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
பிறகு 2004-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதைத் தொடந்து சயிஃப் அலிகான்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா பூரை காதலித்து கடந்த 2012-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் ஸ்டார் வோல்ட் சேனலில் நடந்த காஃபி வித் கரண்-6 நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினர் களாக சயிஃப் அலிகானும் அவரின் மகள் சாரா கானும் கலந்து கொண்டனர்.
இருவரும் அப்பா, மகள் இடையே இருக்கும் உறவு குறித்தும் கரீனா- சயிஃப் திருமணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறினர்.
ஏற்றுக் கொள்ளும் படி அப்பா எங்களிடம் பல முறை கூறியுள்ளார்’ என தெரிவித்தார்.
அன்றைய தினம் இவர்கள் இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்ட கருத்துக்குப் பதில் அளித்துள்ளார் நடிகை கரீனா.
இது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகத்துக்கு பேட்டி யளித்துள்ள அவர், `` என்னால் சாராவுக்கும்,
இம்ராஹிமு க்கும் தாயாக இருக்க முடியாது என நான் எப்போதும் சயிஃபிடம் கூறிக்கொண்டு தான் இருக்கிறேன்.
என்னால் அவர்களுக்கு ஒரு நல்ல தோழியாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு சிறந்த தாய் உள்ளார்.
அவர் தனியாக நின்று பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து வருகிறார். நான் அவர்கள் மீது அன்பு வைத்துள்ளேன்.
அவர்களுக்கு எப்போதும் உடனிருப்பேன்’ எனத் தெரிவித் துள்ளார்.
மேலும், ‘பாலிவுட்டில் அழகும் அறிவும் சிலருக்குத் தான் ஒன்று போல இருக்கும்.
அது சாராவுக்கு நிறைவே இருக்கிறது. அவருக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் உள்ளது.
அவள் வெள்ளித் திரையில் நல்ல நடிகையாக வலம் வருவாள் என எனக்கு நம்பிக்கை உள்ளது அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார்.
சயிஃப் அலிகான் மகள் சாரா தற்போது சுஷன் சிங் ராஜ்புட் நடிகராக நடிக்கும் ‘கேதார்நாத்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.





No comments