‘சர்கார்’ விவகாரம் குறித்து குறித்து கமல் - இது ஜனநாயகம் இல்லை !
‘சர்கார்’ விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’.
இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கதை திருட்டு உள்ளிட்ட பல சர்ச்சைகளை சந்தித்தது.
அதையும் மீறி தீபாவளி அன்று வெளியாகி வசூலை அள்ளியது. மேலும் ரசிகர்க ளால் கொண்டாடப் பட்டது.
இதில் அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது, வில்லி கதாப் பாத்திரத்திற்கு
கோமளவள்ளி என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகியது.
இதை யடுத்து அதிமுகவினர் ‘சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்ட த்தில் குதித்தனர்.
தமிழகம் முழுவது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டம் வெடித்தது.
இதனால் அனைத்து திரையரங்கு களிலும் இந்தத் திரைப்படம் நிறுத்தி வைக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கம் செய்ய திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம்
ஒப்புதல் அளித்து காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப் பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி
இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்புக்கு பதிலளிக்க கோரி வழக்கை ஒத்தி வைத்தது.
இதை யடுத்து இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங் களையோ விமர்சிக்க மாட்டேன் என
அரசை விமர்சித்த தற்காக முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித் துள்ளது.
இந்நிலை யில், தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்ட படத்தை வைத்து பாசிசம் செய்ய
தமிழக அரசு முயல்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், “ சர்கார் திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.
கருத்து ரிமையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை.
ஏற்கனவே தமிழக அரசின் பாசிசம் முறியடிக்கப் பட்ட நிலையில் அதை மீண்டும் முயற்சிக்கிறது.” எனத் தெரிவித் துள்ளார்.




No comments