நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் !
நீங்கள் இணையத்தில் கசிய விட்டும் கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக் கிறது.
எங்ககிட்ட மோதாதீங்க என ‘டாக்ஸிவாலா’ வெற்றி விழாவில் பேசியுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி வெளியாகி யுள்ள படம் ‘டாக்ஸிவாலா’.
ராகுல் சங்கிரிட்யான் இயக்கி யுள்ள இப்படத்தை, ஃபன்னி வாஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் இணைந்து தயாரித் துள்ளனர்.
இப்படத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்தது.
ரிலீஸுக்குத் தயாரான நிலையில், யாரும் எதிர் பாராத விதமாக ‘டாக்ஸிவாலா’ படம்
இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிடப் பட்டது. “பல மாதங்க ளுக்கு முன்பே இப்படம் எங்கள் கையில் வந்தது.
படம் திரைக்கு வந்து 2 வாரங்கள் கழித்து வெளி யிடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தோம்.
சிலரது செயல் பாடுகளால் இப்போதே வெளியிட்டு விட்டோம்.
இதற்கு வருந்துகிறோம்” என்று இப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் குழு இணையத்தில் தெரிவித் திருந்தது.
இதனால், படக்குழு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமே அச்சத்தில் உறைந்தது.
படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப் பட்டது. ஆனால், எதிர் பார்த்ததை விட படம் ஹிட்டானது.
இதனைக் கொண்டாடும் வகையில், நேற்று (நவ.23) வெற்றி விழா நடந்தது.
அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, “நான் திரும்பி வருவேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன்.
எங்கள் படத்தை இணையத்தில் கசியவிட்ட ராக்கர்ஸ், ரூலர்ஸ் எல்லோரும் மன்னித்து விடுங்கள்.
எங்களுடன் மோதாதீர்கள். நீங்கள் லீக் செய்தும் கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக் கிறது” என்றார்.
மேலும், படங்கள் திரைக்கு வருவதில் நிலவும் பொதுவான சிக்கல்கள் குறித்துப் பேசினார்.
‘டாக்ஸிவாலா’ இணையத்தில் லீக் ஆன போது துணை நின்ற அனைத்து திரை நட்சத்திரங் களுக்கும் நன்றி கூறினார்.



No comments