இயக்குநர்களுக்கு அறை விட்ட‘பாகுபலி’ கரண் ஜோஹர் சிலாகிப்பு !
தென்னிந்தியா வில் இருந்து இந்திக்குப் போய் இதுவரை ஒருசில படங்கள் குறிப்பிடத்தக்கப் புகழைப் பெற்றிருந் தாலும்,
பாகுபலி’யின் வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்று என பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
2015-ம் ஆண்டு, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம், மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தியில் யாரும் எதிர்பாராத வண்ணம், 110 கோடி ரூபாய் வசூலையும் தாண்டி, டப்பிங் படங்களில் சாதனை படைத்தது.
‘பாகுபலி 2’ திரைப்படமும் பல கோடிகளைக் குவித்தது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை யையும் பெற்றது.
தென்னிந்திய மொழிகளில் இருந்து இந்தியில் பல படங்கள் அவ்வப்போது டப்பிங் செய்யப்பட்டு வெளி யானாலும்,
‘பாகுபலி’ மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று, இந்தியில் படத்தை வெளியிட்ட கரண் ஜோஹர் பேசி யுள்ளார்.
“பாகுபலி வரும் வரை அதுபோன்ற ஒரு பிரம்மாண்டத்தை யாருமே பார்த்ததில்லை.
உணர்வுகள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் போது, அதை யொட்டிய கதைகளும் அனைவரையும் போய்ச் சேரும்.
அது எங்கு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி. இவ்வளவு பெரிய வெற்றி அடிக்கடி நடக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்படியான பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட மாக உருவாகும் படங்களுக்கு,
வெளியீடே பெரிய நிகழ்வாக இருக்கும் படங்கள் வேண்டு மானால் இப்படியான வரவேற்பை மீண்டும் பெறலாம்.
ஆனால், எல்லாப் படங்களாலும் பெற்று விட முடியாது. ‘பாகுபலி’ படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது,
இந்தியாவில் எடுக்கப் பட்டுள்ள மிகப் பிரம்மாண்ட படம் இது தான் என்று நான் சொன்னேன்.
முதலில் வந்த ‘பாகுபலி’ டீஸரே அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.
அவ்வளவு பெரிய நீர் வீழ்ச்சியை யாரும் இதுவரை திரையில் பார்த்த தில்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்த தில்லை.
இது இந்தியாவில் எடுக்கப்பட்ட படம் தானா? எனப் பலரும் வியந்தனர். முதல் பாகம் பரிசோதனை முயற்சி,
அது வெற்றி பெற்றதுமே கண்டிப்பாக 2-வது பாகம் வெற்றி யடையும் என்பது தெரிந்து விட்டது.
ஏனென்றால், நடுவில் முதல் பாகம் தொலைக் காட்சியில் அவ்வளவு பார்வை யாளர்களை ஈர்த்து டி.ஆர்.பி.யில் கலங்கடித்தது.
இந்தி சினிமாவில் இருப்பவர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது.
ஆனால், இந்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஒரு படம் தெலுங்கில் எடுக்கப் பட்டது என்பதே உண்மை.
வியாபார ரீதியிலும் அதுவே உண்மை. ‘பாகுபலி’ எங்களுக்கு (பாலிவுட் இயக்குநர் களுக்கு) அழகான அறை விட்டு விழிக்கச் செய்தது.
நல்ல கதையை, நல்ல தொழில் நுட்பத்தில் பிரம்மாண்ட மாகப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது.
ராஜமெளலி உணர்வுப் பூர்வமாகக் கதை சொல்வதில் வல்லவர். ஒவ்வொரு கதா பாத்திரத்துட னும் நம்மை ஒன்ற வைத்தார்.
முதல் பாகத்தை அவர் முடித்த விதம், அவ்வளவு அற்புதமாக இருந்தது.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற கேள்வி, தேசிய அளவில் பிரபலமானது.
பல விதங்களில் ‘பாகுபலி’ ஒரு முன்னுதாரண மாக விளங்குகிறது” என்று கரண் ஜோஹர் கூறியுள்ளார்.



No comments