EThanthi - இளையராஜாவின் பாடல்களைக் பாட எவ்வளவு கட்டணம்?

Flash News

இளையராஜாவின் பாடல்களைக் பாட எவ்வளவு கட்டணம்?

ஐபிஆர்எஸ் -க்கு பதிலாக இசைக் கலைஞர்கள் சங்கம், இந்த ராயல்டி தொகையை வசூலித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இதில் அடங்கு வார்கள். 
யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்ய வில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். 

பணம் வாங்கிக் கொண்டு தான் நீங்களும் இசை நிகழ்ச்சி களை நடத்துகிறீர்கள். என் பாடலை பாடுபவர்கள் பணம் வாங்கு கிறார்கள். 

அதில் எனக்குப் பங்கு இல்லையா? பாடலே என்னுடையது என்கிற போது பங்கு எப்படி இல்லாமல் போகும். 

பங்கு என்பது சிறிய தொகை தான். அதைக் கூட பெயருக்குத் தான் கேட்கிறேன். 

நாளைய தலைமுறை க்கு இது சரியான நடவடிக்கை யாக இருக்கும். முன்னோடி நடவடிக்கை யாகவும் இருக்கும். 

அதில் அடியெடுத்து வைத்தவன் நான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித் துள்ளார் இளையராஜா.

பாடல்களின் காப்புரிமை யைக் காக்கும் பணியையும், நெறிப் படுத்தும் பணியையும் 

இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை. 
இந்த நிதி உறுப்பினர் களின் சேமநல நிதிக்கும், உறுப்பினர் களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும். 

இளையராஜா இந்த பெரிய சேவையை அளித்ததில் இசைக் கலைஞர்கள் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது 

என்று இசைக் கலைஞர்கள் சங்கம் வெளி யிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

எனினும் இளையராஜா வின் விடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் பல்வேறு எதிர் மறையான கருத்துகளை உருவாக்கி யுள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய பாடல் களைப் பாடுவதற்கு இளையராஜா கேட்கும் கட்டணம் எவ்வளவு என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக திரையிசைக் கலைஞர்கள் சங்கம் வெளி யிட்டுள்ள தாக ஒரு தகவல் வெளியாகி யுள்ளது. அதில் உள்ள கட்டண விவரங்கள்:

இளையராஜா வின் பாடல்களைப் பயன்படுத்தி வெளி நாடுகளில் கச்சேரி செய்வதற்கு ஏ பிரி வினருக்கு ஓர் ஆண்டுக்கு ரூ. 20 லட்சமும் 

பி பிரிவினருக்கு ரூ. 15 லட்சமும் சி பிரிவினருக்கு ரூ. 10 லட்சமும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
இந்தியாவில் அறக்கட்டளை நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்த நாள் நிகழ்ச்சிகள், கோயில்கள், 

கல்வி நிறுவனங்கள் ஆகிய வற்றில் கச்சேரி நடத்து வதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. 

ஏ.பி, சி பிரிவுகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல பாடகர்களின் அடிப்படை யில் வகைப் படுத்தப் படுகிறது. 
இளையராஜாவின் பாடல்களைக் பாட எவ்வளவு கட்டணம்? இளையராஜாவின் பாடல்களைக் பாட எவ்வளவு கட்டணம்? Reviewed by EThanthi.in on November 28, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close